கா.கோவிந்தன்
வரலாற்றின் குறிக்கோள்
வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க் களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப் பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்றால் கி.பி 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஓர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம்.
இதற்கு மாறாகத் தங்கள் வாழிடங்களைச் சூழ உள்ள நிலக்கூறுபாடுகளின் தூண்டுதலாலும், வேறுவேறு பட்ட பண்பாடு, நாகரீகங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் பல்வேறு இனமக்களோடு கொண்ட தொடர்பு தந்த செல்வாக்குளின் தூண்டுதலாலும், ஓரின மக்களின் சமூக சமய வாழ்க்கையில், சிறுகச் சிறுக ஏற்பட்டுவிட்ட வளர்ச்சி நிலைகளின் மதிப்பீடு அம்மக்களின் உண்ணல் பருகல், விளையாட்டு, ஆடல், பாடல், அரசர்க்கும் கடவுளர்க்கும் ஆற்றும் வழிபாடு, ஆகிய இவைகளில் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்களின் விரிவான விளக்கம், அம்மக்களின் உள்நாட்டு வாணிகம், சேய்மை அண்மைக்கண் உளவான நாடுகளோடு கொண்டிருந்த உறவுநிலை, குறியீட்டு நிலையாம் எளிய தொடக்க நிலையிலிருந்து, அரிதின் முயன்று பயின்றாலல்லது, எளிதில் விளக்கம் பெறமாட்டா. இலக்கிய இலக்கண மரபுகள், முடிந்த முடிபாக முழுமையாக்கப்படும் வரையான, அவர்தம் இலக்கிய வளர்ச்சியின் விரிவுரை விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்பதின் பொருள் என்றால், தொல்லூழிக் காலத்திலிருந்து, கி.பி. 600 வரையான காலத்திற்கான தமிழர்களின் வரலாற்றினைத் திரும்ப வரைதற்குத் தேவைப்படும் வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் உள்ளன, அவ்வரலாற்றுக்கதை மறுபடியும், வரையப்படுவது முயலப்பட்டுள்ளது இந்நூலில்.
மக்கள் நாகரீகத்தின் பழங்கற்காலம், புதுக் கற்காலம் என்ற வேறுபட்ட காலகட்டங்களைச் சேர்ந்தனவாகிய கற்களால் ஆன படைக் கலங்களும், தொழிற் கருவிகளும், முறையாகத் திரட்டப்படவில்லை என்றாலும், பல்வேறு மக்களால் கண்டெடுக்கப்பட்டு, இந்தியநாட்டு அரும் பொருட்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன, அக்கருவிகள் கூறாமல் கூறும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, அப்பழம்பெரும் நாட்களில் தமிழர்கள் நடத்திய வாழ்க்கைநிலை பற்றிய ஒரு மதிப்பீடு சென்னைப் பல்கலைக் கழகம், 1926ல் வெளியிட்ட “இந்தியாவின் கற்காலம்” என்ற என் நூலில் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய இரும்புக் காலத்தைச் சேர்ந்தனவாய படைக்கலங்களாலும், தொழிற்கருவிகளாலும் சிறிய அளவிலும், வடநாட்டு ஆரிய நாகரிகத்தோடு தொடர்பு கொள்வதற்கு முன்னர், அவர்கள் வழங்கிய சொற்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவால் மிகப்பெரிய அளவிலும் தெரியவரும். அவர்களின் சமூக, சமய, அரசியல் தொழிலியல் வாழ்வு நிலைகள், சென்னைப் பல்கலைக்கழகம் 1929ல் வெளியிட்ட “ஆரியத்திற்கு முந்திய தமிழர் நாகரீகம்” என்ற என் நூலில் விளக்கப்பட்டுள்ளன. (அவர்களின் பழம் இலக்கியச் சார்புடையவும், வேறு வகைச் சார்புடையவும் ஆய கால வெள்ளத்தின் அழிவுக்கு ஆட்பட்டுப் போகாமல், என்னென்ன பேணிக்காக்கப்பட்டுள்ளனவோ அவற்றிலிருந்தும் சமஸ்கிருதம், பாலி, கிரேக்கம் ஆகிய மொழிகளிலும் இலத்தீன் தொன்மை வாய்ந்த) ஆவணக் குறிப்புகளிலிலும் இவர் பற்றிக்கூறியிருக்கும் குறிப்புகளிலிருந்தும், பெறக்கூடிய தமிழர் வரலாற்றின் மறு தொகுப்பிற்கான ஒரு முயற்சியே இந்நூல்.
வரலாற்று மூலங்கள்
“தனி ஒருவர், மற்றும் சமூக வாழ்வின் குறிக்கோள் ஒழுக்கம் பற்றிய ஆரியரின் பழங்கருத்துகளைக் கொண்டிருப்பதான, மந்திரங்கள், பிராமணம் என்ற பொருளில் நான் கொள்வதான வேத இலக்கியம் (இரண்டுமே ஒரு சேர இருந்து வேதங்கள் எனப்படுவன வாகி) மற்றும் சூத்திரம், அதுபோலவே இராமாயணம், மகாபாரத இதிகாசங்கள், புராணங்கள், பெளத்த, அர்த்தமாக ஜெயின் பழம்பெரும் பாலி மொழியிலான இலக்கியங்கள், அதாவது, ஆரிய வரலாற்று மூலங்கள் அனைத்தும், வரலாற்றுச் செய்திகளுக்காக முழுமையாகத் துருவித் துருவி ஆராயப்பட்டு விட்டன. இவை போலும் வரலாற்று மூலங்களிலிருந்து பெறப்படும் செய்திகள் ஆரியர்கள், தமிழர்களோடு கொண்ட தொடர்பினை மட்டுமே விளக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.
வட இந்தியப் பழங்கதைகளைக் குறிப்பாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கும் பழங்கதைகளை எடுத்தாளும் நிலையில், நான். திருவாளர் பர்கிதர் அவர்களின் நுணுகிய ஆய்வு முறையினையும் முடிவுகளையும், பெரும்பாலும் முழுமையாகப் பின்பற்றியுள்ளேன். இக்குவாகு காலத்திற்கும் ஸ்ரீ கிருஷ்ணன் காலத்திற்கும் இடையில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வந்து வந்து காட்சி அளித்துப் படிப்பவரைக் குழப்பத்திற் குள்ளாக்குவோர்களாய அகஸ்தியர் ஒரே அகஸ்தியர் அல்லர், வசிஷ்டர், ஒரே வசிஷ்டர் அல்லர், விசுவாமித்திரர், ஒரே விசுவாமித்திரர் அல்லர். அந்தந்த நூற்றாண்டுகளில் ஒவ்வொரு பெயர் கொண்டு வாழ்ந்த பலராவர். அப்பெயர்கள் தனித்தனி மனிதர்களைக் குறிப்பன அல்ல. அவை, ஒவ்வொன்றும், ஒவ்வொரு குடிப்பெயரைக் குறிப்பனவாம் என்பது, திருவாளர் பர்கிதர் அவர்களின் பல்வேறு கருத்துகளில் நனிமிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இம்முடிவு, குழப்ப நிலையைக் குறைத்துத் தெளிவு நிலையினைத் தோற்றுவித்ததோடு, வட இந்திய நாடுகளில், பழங்காலத்தே அடுத்தடுத்து அரசு கட்டில் ஏறிய அரசர்கள் பற்றிப் பெரும்பாலும் சரியானதொரு பட்டியலை, பொதுவாகப் பின்பற்றும் இப்பட்டியலைத் திருவாளர் பர்கிதர் அவர்கள் தயாரிக்கத் துணையும் புரிந்தது. (இப்பட்டியல்) வேதகாலத்தில் தென்னாட்டில் ஆரிய நாகரீகம் மெல்ல மெல்லப் பரவிய நிலையினைக் கண்டுகொள்ள எனக்கும் துணை நின்றது.
மெஸபடோமிய, எகிப்தியக் கல்வெட்டுக்கள் கிரேக்க இலத்தீன் மொழி இலக்கியங்கள் போலும் இந்திய நாட்டைச் சேராதனவாகிய வரலாற்றுச் சான்றுகள், தனக்கு மேற்கே உள்ள நாடுகளோடு இந்தியா கொண்டிருந்த வாணிபத் தொடர்பினை மட்டுமே குறிப்பிடுகின்றன. செங்கடற் செலவு என்ற பெரிபுலுஸ் நூலின் தம்முடைய பதிப்பில், திருவாளர் ஸ்காப் அவர்களாலும், “உரோமப் பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாணிகம்” என்ற தம் நூலில், திருவாளர் லார்மிங்டன் அவர்களாலும், இந்த வரலாற்றுச் சான்றுகள் முற்றவும் ஆராயப்பட்டு, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. அந்நூல்களில் கூறப்பட்டிருக்கும் எழுத்து வடிவிலான நல்ல ஆவண அடிப்படையிலான செய்திகளை, இந்தியாவின் சார்பில் கிடைக்கக்கூடிய சிறு செய்திகளோடும் ஒப்புக்காட்டி நூற்றாண்டு நூற்றாண்டு வாரியாக வரிசைப்படுத்தியுள்ளேன்.
ஆனால், இந்நூலுக்கு உறுதிவாய்ந்த சான்றுக் களஞ்சியமாக நான் மேற்கொண்டது, கி.பி. 600க்கு முந்திய காலத்துத் தமிழ் இலக்கியமே ஆகும். பெரும்பாலான என் ஆராய்ச்சி முடிவிற்கு அடிப்படை ஆதாரமாக, உண்மையில் நான் மேற்கொண்ட நனிமிகப்பழைய நூல், தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆகும், அந்நூல், அது எழுதப்படுவதற்கு முந்தித் தோன்றிய இலக்கியங்களுக்கான இலக்கண மரபுகளை நேரிதாக எடுத்து விளக்கவே எண்ணியுள்ளது, அவ்விலக்கணை மரபுகளை அந்நூல் எழுந்த காலத்திற்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்களின் உண்மையான பழக்க வழக்கங்களாகவே நான் மதிக்கின்றேன். பண்டைத் தமிழரின் எண்ணித் தொலையா இலக்கியப் படைப்புகளின் ஒரு சிறு பகுதியாய் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற தலைப்புகளில் தொகை நூற்களில் தொகுக்கப் பெற்றிருக்கும், வேறு வேறுபட்ட நூற்றாண்டுகளில் எழுதப்பட்டனவாய் அப்பாக்கள் பலவும் தரும், வரலாற்றுச் சான்றுகளே தெளிவான, உறுதி வாய்ந்த நேரிடைக் கூற்றுகளாகும், இச்செய்யுள்கள் இரு பெரும் அறிஞர் பெருமக்களால் இதற்கு முன்பே வரலாற்று ஆய்வுக்கும் ஓர் அளவு பயன்படுத்தப்பட்டுள்ளன.
சொல்லேருழவு செய்யப்படாமல் வெற்றுக்கரம்பாகவே இருந்து வந்த, தமிழிலக்கியத்திறன் ஆய்வு என்ற மண்ணில், திருவாளர் வி.கனகசபை அவர்கள் முதல் உழவு செய்து, பண்டைய தமிழரசர்களின் வரலாறு பற்றிய ஆய்வினை முதன்மையாகவும், அக்கால மக்கள் வாழ்வியல் பற்றிய ஆய்வினை இடைப்பிறவரலாகவும் மேற்கொள்ளும், “1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்” என்ற தம்முடைய நூலைக் கொணர்ந்துள்ளார், முதுபெரும் தமிழ் அறிஞராக அவர் இருந்தும், பழந்தமிழ் இலக்கியங்களில் பெரும்பகுதி அவர் காலத்தில் அச்சிடப்படாமையால் அத்துறையில், முழுமையாக வெற்றி காண இயலாமையால் அவர் வருந்தினார், அதனால், நம்புதற்கியலா வரலாற்றுக் கட்டுக்கதைகள் சில இடம் பெற்றுவிடத்தக்க, பல தவறுகளுக்கு அவர் பொறுப்பேற்க நேர்ந்துவிட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின், இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறைகளின் பேராசிரியராகிய முதுபெரும் அறிஞர் திருவாளர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த பண்டைத்தமிழ் அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவையும் துருவித் துருவி ஆய்ந்து வெளிப்படுத்தித் தம்முடைய பல்வேறு நூல்களில் திறன் ஆய்வு செய்துள்ளார், ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைக்காலத்து மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய செய்திகளை நூற்றாண்டு வாரியாகப் பெருமளவில் கொண்டிருப்பனவாகவும் (அப்பழங்காலச் சமுதாய வாழ்வியல் முறை பற்றிய) வரலாற்றுச் செய்திகளையோ அதன் வளர்ச்சி நிலை பற்றிய ஆய்வினையோ அவர் மேற்கொண்டாரில்லை. ”
உண்மையில் அவ்விலக்கியங்களில் இரண்டறக் கலந்து கிடக்கும் இத்துணைச் செல்வங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என எண்ணிக் கலக்கப் படுமளவான வரலாற்றுச் செல்வங்கள் மிகப்பலவாம், பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து மட்டும் கல்லி எடுக்காமல் வரலாற்றுச் செய்திகளில் ஒரு கால் கூறினைக்கூட பயன்படுத்தவில்லை என்றே நான் அஞ்சுகின்றேன். வரலாற்றுச் செய்திகளாக, ஆய்ந்து கண்டு நான் கூறியிருப்பன பெரும்பாலும் முழுக்க முழுக்கப் புதிய செய்திகளாகவே, என்னுடைய ஒவ்வொரு முடிவையும் அரண் செய்யும் சான்றாகத் தமிழ் இலக்கியத்தில் காணலாம். செய்திகளை அவற்றின் மூலவடிவிலேயே தருவதை, ஒவ்வொரு அதிகாரத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கொண்டுவிடும் வகையில் அளித்திருப்பதன் மூலம், என் நூலைப் படிக்கும் தமிழ் அறியாதவர்களை அலைக்கழிக்க அல்லற்படச் செய்து, முந்திய எழுத்தாளர்கள் செய்யாது விட்ட ஒன்றை நான் செய்துள்ளேன்.
இந்நூலுக்காக நான் மொழி பெயர்த்திருக்கும் தமிழ் இலக்கிய மேற்கோள் பாக்கள் பழஞ்சொற்களையும், வழக்கிறந்து போன இலக்கண மரபுகளையும் பெருமளவில் கொண்டுள்ளன என்பதைக் கூற வேண்டியது பெரும்பாலும் தேவையற்றது. மூலங்களுக்கு உரை வகுக்கும் நிலையில் உரையாசிரியர்களும் சிற்சில இடங்களில் மிகமிக அரிதாக என்றாலும் வழிதவறிச் சென்றிருப்பதால், அவர்கள் உரை, தவறான உரையாக இருக்கக்கூடும் என நான் எண்ணிவிடும் இடங்களில் அவர்கள் கூறுவதிலிருந்து வேறுபட, நான் தயங்கியதில்லை. ”
தமிழும் ஆங்கிலமும் மொழி அமைப்பில், ஒன்றிலிருந்து ஒன்று மிகப் பெரிய அளவில் வேறுபட்டு இருப்பதால், எடுத்தாளும் செய்யுள்கள் எளிமையில் பொருள் விளங்கக்கூடியனவாக இருப்பினும், அவற்றை மொழி பெயர்ப்பது கடினமாகவே உளது. மேலும் தமிழ்ப் புலவர்கள், குறிப்பாக கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டினரான பிற்காலப் புலவர்கள், தம்முடைய செய்யுட்களில், சொற்றொடர்க்கு மேல் சொற்றொடர்களையும், அடைமொழிக்கு மேல் அடைமொழியினையும் அடுக்கிக் குவிப்பதில் அளவின்றி ஆர்வம் காட்டியிருப்பது நேரிடை மொழி பெயர்ப்பைப் பெரும்பாலும் இயலாததாக ஆக்கியுளது. ஆனால்
இம்மொழிபெயர்ப்புகள் ஒரு வரலாற்றுப் பயன் குறித்து ஆதலின், அவ்வப்போது மீறி, பொருள் விளக்க நிலை மொழிபெயர்ப்பு முறையினை மேற்கொண்டுள்ளேன். ஆயினும், அம்மொழி பெயர்ப்பு, படித்துப் பொருள் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒன்றே என்பதை உணர்த்தும் என நம்புகின்றேன். என்னுடைய மொழிபெயர்ப்பு எங்கெல்லாம் பிழைபட்டிருப்பதாக உணர்கின்றனரோ, அவை அனைத்தையும் என் நோக்கிற்குக் கொண்டுவருமாறு தமிழறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன், எங்ஙனமாயினும், செய்யுள் மூலத்தை எந்த இடத்திலும் பொருட்பிழைபட உணர்த்தியிருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஆண்டுகள் வழி நிகழ்ச்சி நிரல்
ஆண்டுகள் வழி நிகழ்ச்சிநிரல், வரலாற்றின் கண்ணாயின் பண்டைய இந்திய வரலாறு எப்போதும் குருடாகவே இருக்கும். உண்மைகள் அதாவது கணக்குப் பிறழாத, சரியான தேதிகள், மிகமிக அருகேயே தேவைப்படும் என்பதால் மக்கள் வாழ்வியல் வளர்ச்சி பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் அவ்வாய்வுக்கு அடுத்தடுத்து இடம் பெற்றுவிட்ட நிகழ்ச்சிகள் அளவிலேயே மனநிறைவு கொள்வர். பழைய இந்தியாவின் ஆண்டுவழி நிகழ்ச்சி நிரல் அறுதியிட்டு முடிவு செய்ய இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறே தொடர்ந்து இருக்கும். அதனால் நாட்டுப்பற்று மிகுந்த தற்புகழ்ச்சியாளர்க்கும், ஒன்றைப் பலபடப் பெரிதாக்கிக் காட்டும் பொய்க் கூற்றினர்க்கும் போதிய வாய்ப்பினை அளித்து வந்துள்ளது, அளித்து வருகிறது.
“கிருத்துவத் தலைமைக்குரு திருவாளர் அஷர் அவர்களின் ஆண்டுவழி நிகழ்ச்சிநிரல் பட்டியல் செலுத்திய மேலாதிக்க விளைவால் உலகம் கி.மு. 40004ல் தோற்றுவிக்கப்பட்டது என நம்பியிருந்த காலத்தில், வேதகாலத் தொடக்கம் கி.மு. 1200 ஆக முடிவு செய்யப்பட்டது. அந்நாளிலிருந்து மண்ணியல் ஆய்வாளர்கள் மனிதனின் கடந்தகால வரலாற்றிற்குக் குறைந்தது நூறாயிரம் ஆண்டுகளாவது ஒதுக்கப்பட ‘வேண்டும் என வாதிட்டு வந்துள்ளனர் என்றாலும், ஆரிய நாகரீகத்தின் செல்வாக்கு சிறிதளவு தானும் காணக்கூடாத கி.மு. 3000க்கும் முந்தியதான சயிந்தவன் நாகரீகத்தின் அடிச்சுவடுகள், அரப்பா மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் அகழ்ந்து காணப் பட்டன என்றாலும், கடந்த நூறு ஆண்டு கால அளவில் சிறிதும் நம்புதற்கு இயலாத நனிமிகப் பிற்பட்ட காலத்தை வேதகாலந் தொடக்கத்திற்கு ஒதுக்கி விட்ட தேக்கநிலை, ஐரோப்பிய வரலாற்றுப் பேராசிரியர் களை மறுசிந்தனை செய்யத் தடுத்துவிட்டது.
திருவாளர் பர்கிதர் அவர்களின் பட்டியலிலிருந்து, பாரதப் போருக்கு முன்னர், 90 தலைமுறைகளைச் சேர்ந்த அரசர்கள் ஆட்சி புரிந்தனர் என அறிகிறோம். பல்வேறு ஆய்வுகள், நிலைநாட்ட முனைவதுபோல், அப்போர் கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாயின், வேதகாலம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு மிக முற்பட்ட காலத்தில் தொடங்கியதாதல் வேண்டும்.
ஆரியரின் ஒற்றைத்தி வழிபாட்டுமுறை, வேதகாலத்து முத்தீவழிபாட்டு முறைக்கு முன்னே, மிக நீண்ட காலத்திற்குச் சிறந்து விளங்கியிருத்தல் வேண்டும். இவ்வகையால், முன்னுரை
ஆரியரின் தீ வழிபாட்டு நெறியின் தொடக்கத்திற்கு கி.மு. 3000ஐ நாம் அடைகிறோம். அந்தப் புதிர் ஈண்டு ஆராயத் தேவையில்லை. ஆனால் அவ்வேத காலம், ஒவ்வொன்றும் 500 ஆண்டுகளைக் கொண்டதான மூன்று யுகங்களை உள்ளடக்கியதாகவும் ஏறத்தாழ கி.மு. 3000ல் தொடங்கிய தாகவும். நான் கருதுகிறேன் எனக் கூறுகின்ற அறவோடு நிறைவு கொள்கிறேன்.
ஸ்ரீ இராமச்சந்திரன், வேதகாலத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாவது பகுதியின் இறுதியில் இருந்தார். ஆகவே அவருடைய காலம் கி.மு. 2000 எனக் கருதுகின்றேன். ஸ்ரீ இராமச்சந்திரன் பிறக்கும்போது ஐந்து விண்மீன்கள், மேலாட்சி நிலையில் இருந்தன என்ற செவிவழிச் செய்தியால் உறுதி செய்யப்படுகிறது என்ற சிறப்பும், இந்த நாளுக்கு உண்டு. ஸ்ரீ இராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையே கடந்துபோன காலம் 500 ஆண்டுகள் என்பது ஒரு நல்ல மதிப்பீடு. இம்மதிப்பீடு ஸ்ரீகிருஷ்ணனின் இறப்போடும்,வேதமந்திரங்களை இயற்றி வந்த நீண்ட வழிமுறையினரின் மறைவுகளோடும் ஒன்றுபட்ட, கலியுகத்தின் மரபு வழித் தொடக்கமாம், வேதகால் முட்டி.வுக்கு நம்மைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.
பாரதப்போருக்குப் பின்னர், இந்தியாவின் ஆண்டுவழி நிகழ்ச்சி நிரல் பட்டியல், இன்றியமையா நிலையில் சரியான தல்லவாகலாம் என்றாலும், எளிமையானது. ஆனால், நாம் பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டுவது நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை ஆராய்ந்து காண முயல்வதே நம்பிக்கை யற்றதாகி விட்டதான நிகழச்சிகளின் சரியான நாட்களை அன்று.
தென்னிந்திய வரலாற்றுத் தேதிகளைப் பொறுத்த வரை இவைபோலும், தெளிவிலாக் கற்பனை முடிவுகளும், எட்டுவதற்கு அப்பாற்பட்டே உள்ளன. திருவாளர் கனகசபை அவர்கள் வரலாற்று மனிதர் சிலரின், ஏற்றுக் கொள்ளத்தக்க தேதிகளைக் கண்டுகொள்ளலாம் எனக் கற்பனை செய்துள்ளார். அது, வெறும் மாயை என்பது உறுதி செய்யப் பட்டுவிட்டது. எந்தக் காலத்திற்குப் பின்னர் நம்பத்தகுந்த, ஒரு சில வரலாற்றுத் தேதிகளைப் பெற, சில கல்வெட்டுகள் நமக்குத் துணைபுரிந்தனவோ, அந்தக் காலமாம் கி.பி. 600ஐ அடையும் வரை, அதிகபட்சம், நாம் பெறக்கூடியது தெளிவில்லாத சில நிகழ்ச்சிகளின் வரிசைப்பட்டியல்தான்.
படி எடுத்தல்
சமஸ்கிருதச் சொற்களை, உரோமன் எழுத்து வடிவில் எழுதியது பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் கடைப்படித்த அதே முறைதான். தமிழ்ச் சொற்களுக்காக மேலும் சில எழுத்துக்களை மேற்கொண்டுள்ளேன். அவை யாவன; ‘ஃ’ற்கு ‘H’; ‘ஏ’ வுக்கு ‘E’; ‘ஓ’ வுக்கு ‘O’ ‘ற’ கர மெய்க்கு ‘u’. ‘ழ’ கர இன்றைய ஒலிப்பு நகரத்திற்கு முறையில் ‘ன’ கரத்தை வேறு பிரித்துக் காண முடிய வில்லையாகவே னகரத்திற்க்குத் தனிக்குறியீடு எதையும் பயன்படுத்தவில்லை. தமிழை உரோமன் எழுத்தில் எழுதுவது, தனிச்சிக்கலைத் தோற்றுவிக்கிறது. தமிழ் நெடுங்கணக்கில் பல மெய்யெழுத்துக்களைக் குறிக்கவரும் குறியீடுகள் இரண்டு ஒலிகளைக் குறிக்கும் பணியினைப் புரிகின்றன. உரோமன் எழுத்தில் எழுதுவது ஒலிப்பு முறையோடு வேறுபட்டதாகி விடின் அச்சொல் தன் பொருளையே இழந்துவிடுகிறது. உரோமன் எழுத்தில் அளித்துள்ளேன்.
நான் மேற்கொண்ட ஒலிப்புமுறை பெரிதும் சரியான ஒன்று, ஒவ்வொரு தமிழனும் அதைப் பின்பற்றலாம் அல்லது உணர்ந்து கொள்ளலாம் என்றே எண்ணுகின்றேன். நான் சந்திக்க நேர்ந்த மற்றொரு சிக்கல், ஒரே சொல் சமஸ்கிருத வடிவிலும், தமிழ்வடிவிலும் காணப்படும் போது அதை எழுத்துவடிவில் தரும் நிலையில் ஒரு முரண்பாடு ஏற்பட்டு விடுகிறது என்ற உண்மை நிலையாகும். சூழ்நிலை, ஒருவரை சமஸ்கிருதத்தில் சிந்திக்கவைக்கும் போது, இவைபோலும் சொற்களைச் சமஸ்கிருத எழுத்துகளிலும், தமிழில் சிந்திக்க வைக்கும்போது, தமிழ் எழுத்துகளிலும் தந்துள்ளேன், இம்முறை, அவ்விரு மொழிகளில், ஒரு மொழியைத் தெரியாத வாசகர் களைத் தடுமாறச் செய்யக்கூடும் என்றாலும் இம்முரண்பாட்டு நிலையைத் தவிர்த்துவிடல் கூடும் என நான் நினைக்கவில்லை.