இங்கிலாந்தில் வசந்த காலம் இது !
வசந்த காலம் மழை காலமாக மாறியுள்ளது !
மிகவும் அமைதியாக, ரம்யமாக , இருக்கிறது !
ஜன்னலின் வழியாக பார்த்து வியக்கிறேன் !
மழை துளி பூமியை அடைந்து , பூரிப்படைகிறது !
வெகுகாலம் தன் ஜோடியை பிரிந்த புறாவை போல் ,
செவ்வனமும் கடலும் சங்கமிக்கும் அழகைபோல் ,
மழை துளிகள் பூமியில் விழுந்து புன்னகைக்கின்றது ,
சில நேரங்களில் இளம்வெயில் தன் முகத்தை காட்டுவது,
பச்சிளம் குழந்தை விழித்தவுடன் தன் தாயே தேடுவதுபோல்….,
அந்த நேரத்திலே ஓய்வெடுத்த மழை மறுபடியும் பெய்ய ஆரம்பிக்க ,
அழகிய வண்ணங்களுடைய வானவில் படர்கிறது
தூரத்தில் குயிலின் பாட்டு ,
அலைகளின் அடங்கா ஓசை …….,
மழை துளியின் சாரல் ……,
மண்ணில் மழையின் நறுமணம் …….,
ஆஹா இதுவல்லவா பூமியின் சொர்க்கலோகம் !
என் மனம் மட்டும் என்ன விதிவிலக்கா……?!
இயற்கையில் லயித்து …….,
ஓவியம் வரைந்து……,
வண்ணங்களோடு விளையாடி மகிழ்கின்றேன் !
– முத்துக்கருப்பி நாச்சியப்பன்